கற்காலம்
1. பூமியின் தோற்றம் - 460 கோடி ஆண்டுகளுக்கு முன்
2. காலத்தை கணிக்க ரேடியோ கார்பன் முறை பயன்படுகிறது. மற்றொரு முறை டென்ட்ரோ காலக்கணிப்பு முறை. இது மரத்தின் உள்வெட்டுத் தோற்றத்தில் காணப்படும். வளையங்களின் எண்ணிக்கையைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
3. இலக்கியங்கள், வரலாற்றுக் குறிப்புகள், கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள் ஓலைச்சுவடிகள் போன்றவை வரலாற்றுக் காலத்தை கணிக்க உதவும் எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள்.
- வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி என்பவரால் 1949-ல் கண்டறியப்பட்ட இம்முறை, அவருக்கு 1960-ல் அதற்கான நோபல் பரிசையும் பெற்றுத் தந்தது.
5. பழைய கற்கால மனிதர்கள் குவார்ட்சைட் மக்கள் என அழைக்கப்பட்டனர்.
இவர்கள் நாடோடிகளாக
வாழ்ந்தனர்.
6. பழைய கற்கால மக்கள் நீக்ரிட்டோ இனத்தை சேர்ந்தவர்கள்.
7. பழைய கற்காலத்தில் வாழ்ந்த மனிதன் ஹோமோசேபியன் (சுயமாக சிந்திப்பவன் ) என அழைக்கப்பட்டான்.
மனிதனின் தோற்றம் 40,000 ஆண்டுகளுக்கு முன்.
8. பழைய கற்கால மக்கள் இலை, மரப்பட்டை, விலங்குகளின் தோலை ஆடையாக அணிந்தனர்.
9. பேலியோலித்திக் என்றால் பழைய கல் என்று பொருள்.
10. இடைக்கற்காலத்தில் விலங்குகளை வளர்க்கவும், வேளாண்மையில் ஈடுபடவும் செய்தான்.
11. ஆதிமனிதன் முதலில் பழகிய விலங்கு – நாய்
12. பண்டைக்கால பெண்களும் வேட்டையாடினர் என்பதை மத்தியபிரதேசத்தில் உள்ள பிம்பேட்கா குகையில் உள்ள பெண் மடியில் குழந்தையை கட்டிக்கொண்டு அம்பு விடுவது போன்ற ஓவியம் மூலம் அறிய முடிகிறது.
13. வேளாண்மை தோன்றிய காலம் சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்
14. நகரங்களின் தோற்றம் சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன்
15. தமிழகத்தில் பழைய கற்கால கருவிகள் வடமதுரை, அத்திரம்பாக்கம், பல்லாவரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளுர் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டன.
16. புதிய கற்காலத்தில் முதலில் பயன்படுத்திய உலோகம் செம்பு
17. புதிய கற்காலத்தில் இறந்தோரை புதைக்கும் வழக்கம் இருந்தது.
18. புதிய கற்காலத்தில் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது. பருத்தி, கம்பளி, நூல் நூற்ற ஆடை அணிந்தனர்.
19. புதிய கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்ட இடங்கள் :- திருநெல்வேலி, சேலம், புதுக்கோட்டை, திருச்சி, தான்றிக்குடி (கொடைக்கானல் மலை)
20. ஹரப்பா பண்பாடு செம்பு கற்கால பண்பாட்டின் ஒரு பகுதியாகும்.
21. இரும்புக்காலத்தில் இறந்தவர்களை “முதுமக்கள் தாழி” எனப்படும் மட்பாண்டங்களில் இட்டு புதைத்தனர்.
22. வேத இலக்கியங்களில் இரும்பு பற்றி அடிக்கடி குறிக்கப்படுகிறது.
23. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரஸ் முட்டை அரியலூர்
24. பகுதியில்அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
25. தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சிப்பணிகள்
நடைபெறுகிறது.
